கள்ளக்காதலுக்கு இடையூறு! மனைவி, 2 மகள்களையும் எரித்துக் கொன்ற தந்தை!

 
தீ வைத்து கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மனைவியையும், தனது இரு மகள்களையும் தந்தையே எரித்துக் கொன்ற கொடூரம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவிலி என்ற பகுதியில் வசித்து வருபவர் பிரசாத் ஷாந்தராம் பாடீல் (40). இவருக்கு வயது 40. இவருக்கு பிரீதி ஷாந்தாராம் என்ற மனைவியும், சமீரா (14), சமிக்சா (11) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

இதற்கிடையில் கணவர் பிரசாத்துக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், அவரது மனைவி ப்ரீதி அறிந்தது முதல் கணவன், மனைவி இருவருக்கு இடையே தொடர்ந்து மோதல் இருந்து வந்துள்ளது.

எரித்து கொலை

இதனால் கணவர் தனது உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும் மனைவி மற்றும் 2 மகள்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலையில் மனைவி மற்றும் 2 மகள்களை தீ வைத்து எரித்துள்ளார். அதன் பின்னர் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் திடீரென ஏற்பட்ட விபத்தில் 3 பேரும் உயிரிழந்து விட்டதாக நாடகமாடி தப்பித்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார்.

திட்டமிட்டபடி சனிக்கிழமை அதிகாலை  மனைவி மற்றும் 2 மகள்களையும்  உயிருடன் தீவைத்து எரித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பிரசாத்திற்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் தகவல் கிடைத்த 3 மணி நேரம் கழித்தே வந்து சேர்ந்தனர். அப்போது மனைவி ப்ரீத்தி, 2 மகள்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மனைவி ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

எரித்துக் கொலை

2 மகள்களும் 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து போலீசார் பிரசாத் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தகாத உறவை தொடர்வதற்கு, மனைவியும், 2 மகள்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web