உற்சாகத்தில் மாணவர்கள்!! அக்டோபர் 9ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!!

 
விடுமுறை


தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அக்டோபர் 9ம் தேதி வரை இந்த விடுமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ மெட்ரிக் பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவடைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை, தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி  பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கு அக்டோபர்  9ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது.  சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுகின்றன. அக்டோபர் 6ம் தேதி நாளை முதல்  பள்ளிகளை திறப்பதா அல்லது விடுமுறை தொடர்வதா என்று குழப்பம் நிலவி வந்தது.

விடுமுறை

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செப்டம்பர்  30ம் தேதியுடன்  காலாண்டுத் தேர்வு முடிவடைந்த நிலையில்  அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு 6ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விடுமுறையை நீட்டித்து அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை தொடரும். அக்டோபர் 10ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web