அடுத்தடுத்து சிக்கல்! டிடிஎஃப் வாசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 
ஜிபி முத்து டிடிஎப் வாசன்

பிரபலம்னாலே பிராப்ளம் தாம்ப்பா என்று கவுண்டமணி திரைப்படத்தில் சொன்னது எத்தனை காலத்துக்கும் செல்லுபடியாகும் போல. புகழின் வெளிச்சத்துக்கு இவர்கள் எடுக்கிற ரிஸ்க்கும், கொடுக்கிற விலையும் அதிகம். தமிழகத்தில் 2கே கிட்ஸ்கள் மத்தியில் சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளுக்காக தன் ரசிகர்களைச் சந்தித்த வீடியோ ஒன்று பெரும் அளவில் வைரலானது. அதில் அவரை பார்க்க ஏகப்பட்ட கூட்டம் கூடியிருந்தது. அன்று முதல் தமிழகத்தில் பெரும் பரவலாக இவரை பற்றி பேசி வருகின்றனர். 

இந்த நிலையில், டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக வாகனத்தை இயக்கி அதை யூ டியூப்பில் டிடிஎஃப் வாசன் வெளியிட்டு இருந்தார்.  இது தொடர்பாக கோவை மாநகரக் காவல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செப்டம்பர் 14-ம் தேதி டிடிஎஃப் வாசன் என்ற நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்துவை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கிரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். 

ஜிபி முத்து டிடிஎப் வாசன்

அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போத்தனூர் போலீசார் ஐபிசி 279 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 184 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். 
இந்நிலையில் டிடிஎஃப் வாசன் மீது சூலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web