சூப்பர்!! ஆஷா பாரிக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது!! குவியும் பாராட்டுக்கள்!!

 
ஆஷா பாரிக்

திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது.தற்போது  52வது தாதா சாகேப் பால்கே' விருதினை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார் இதில் பாலிவுட்  இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை என பன்முகத் தன்மை கொண்ட ஆஷா பாரிக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வயது 79. இந்த அறிவிப்பை தொடர்ந்து பாலிவுட் திரையுலகினர் தங்களின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆஷா பாரிக்

கடந்த 1969ம் ஆண்டு முதல் தென்னிந்திய திரைப்படத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விருதினை அமிதாப் பச்சன், சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகை பொறுத்தவரை சிவாஜி கணேசன் (1996), கே.பாலச்சந்தர் (2010), ரஜினிகாந்த்  ஆகியோர் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 52வது தாதா சாகேப் பால்கே' விருதுக்கான அறிவிப்பினை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை என பன்முகத் தன்மை கொண்டு சிறந்து விளங்கும் நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு இந்த முறை தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து பாலிவுட் உள்ளிட்ட பல்வேறு மொழி திரையுலகினர் நடிகை ஆஷா பாரிக்கிற்கு தங்களின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆஷா பாரிக்

நடிகை ஆஷா பாரிக், "தில் தேகே தேகோ", "கடி படங்", "தீஸ்ரி மன்சில்" மற்றும் "கேரவன்" போன்ற படங்களில் சிறப்பாக நடித்ததன் மூலம் மக்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். மேலும் பாலிவுட்டை பொறுத்தவரை எந்த காலத்திலும் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகைகளில் ஒருவராக நடிகை ஆஷா பாரிக் திகழ்கிறார். இயக்குனர், தயாரிப்பாளர் என்ற போதிலும்  1990ம் ஆண்டு வெளியான ‘கோரா ககாஸ்’ என்ற தொடரை இயக்கியதன் மூலம் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web