சூப்பர்!! மாதம் ரூ1500 பெற ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
மாணவர்கள்

தமிழகத்தில்  தனியார் பள்ளிகளுக்கு இணையாக  அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு திட்டங்களையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி, சிற்பி, பல்வேறு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மாணவிகள்

அதன் ஒரு பகுதியாக நடப்பாண்டு முதல் அரசுப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மொழி இலக்கிய திறனறிதேர்வு அக்டோபர் 15ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் அனைத்து வகை பாடப்பிரிவினை எடுத்து படிக்கும் மாணவர்களும் பங்கேற்கலாம். தமிழ் மொழியில் மாணவர்களுக்கு உள்ள ஆர்வத்தினை அதிகரிக்க இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக, இந்த தேர்வில் நன்றாக மதிப்பெண் பெறும் முதல் 1,500 மாணவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவிகள்

அக்டோபர்  15ம் தேதி, 843 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு, தமிழ்நாடு முழுவதும் இருந்து 2.60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.100 மதிப்பெண்களுக்கு நடைபெறக்கூடிய தேர்வில் இருந்து, மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 750 மாணவர்கள் அரசு பள்ளிகளில் இருந்தும் மீதமுள்ள 750 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒட்டுமொத்தத்தில் 1,500 மாணவர்களுக்கு, மாதம் 1,500 ரூபாய் வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web