பர்சை பதம் பார்க்காம மனசை ரிலாக்ஸ் செய்யும் பட்ஜெட் சுற்றுலாத் தலங்கள்!

 
மேகமலை

பாரீன் டூர் பற்றி சொல்கிறேன் என சொன்னதும் ஏகப்பட்ட பேர் கமெண்ட்ல, என்னப்பா தமிழ்நாட்டுல எதுவுமே ஃபீஸ்புல்லா இருக்க இடமே இல்லையா? நீங்க வேற பாக்கெட் கிழிஞ்சு தொங்கற அளவுக்கு ஃபாரின் டூரா சொல்றீங்க என பொங்கியிருந்தது கொஞ்சம் சங்கடமா தான் இருந்தது. சரி...  உங்கள அப்படி விட்டுடுவோமா என்ன ? நம்ம மாநிலத்தில் மனசை ரிலாக்ஸ் பண்ற மாதிரியான முத்தான மூன்று இடங்கள் இதோ உங்களுக்காக...

மொதல்ல தமிழ்நாட்டை பார்த்துடுவோமா? தேனி அருகில் உள்ள மேகமலை செமத்தியான இடம். மனசு பட்டாம்பூச்சியா பறக்குற மாதிரி ஃபீல் பண்ணுவீங்க. நீங்களும், உங்களுக்கு அருகில் ஒருவரும் பேசிக் கொண்டு இருந்தால், உங்க ரெண்டு பேருக்கும் இடையே புகுந்து புறப்படும் மேகங்கள். அதற்காகத் தானோ என்னவோ மேகமலைனு பேர் வச்சாங்க போல. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நீங்க அங்க போகணும்னா முன்கூட்டியே தமிழ்நாடு கெஸ்ட் அவுஸ் நம்பருக்கு போன் பண்ணிட்டு போங்க. திட்டமிடாம திடீரென போய் நின்றால், ரூம் கிடைக்காது.

மேகமலை

அதே போல மேகமலைக்குப் போகும் போது, பேச்சியம்மாள் உணவகத்தில் சாப்பிட மறக்காதீங்க. அப்படி எல்லாம் முடியாதுன்னு சொல்றீங்களா? அப்படினா உங்களுக்கு தேவையான பொருட்களை தேனியில இருந்து வாங்கிக் கொண்டு கிளம்பி போயிடுங்க. பேச்சியம்மாள் உணவகத்தில் சமைத்து தருவாங்க. அவங்களுக்கு அதற்கு உண்டான பணத்தை தந்து விட்டீங்கன்னா போதும். 

சரி சரி அப்படி இப்படினு சொல்றீங்க  அங்க பார்க்குற மாதிரி என்னென்ன இருக்கு? அப்படித் தானே கேட்குறீங்க? ஒண்ணும் கிடையாது. ஆமாங்க. நிஜமாகவே சுற்றி பார்க்கிற மாதிரி எதுவும் இருக்காது. அந்த க்ளைமேட் தான் சொர்க்கம். மனசைப் பறக்க விடுகிற ரகசியத்தை இயற்கை நமக்கு சொல்லி தர்ற சொர்க்கம் தான் மேகமலை. இயற்கையை அனுபவிக்க நினைக்கறவங்களுக்கு மேகமலை பட்ஜெட்ல செமத்தியான சாய்ஸ். உங்களுக்கு நல்ல நேரம் இருந்தால் இரவில் காட்டு மிருகங்கள் தென்படும். பகலில் அதிசய குரங்கு, பறக்கும் அணில், யானைகள் தென்படும் மற்றபடி இயற்கை... இயற்கை... இயற்கை.. சும்மா ஒருமுறை விசிட் அடிச்சு பாருங்களேன்.

சிறுமலை

அடுத்ததாக சிறுமலை. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கிற, ஆள் ஆரவாரமற்ற மலைப்பகுதி தான் சிறுமலை. தங்கும் விடுதிகள் நிறையவே இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் பழனி, மேகமலை, திண்டுக்கல் நகரின் முழு காட்சியைக் கண்டு ரசிக்கலாம். நிச்சயமாக உங்களை வாட்டி வதைக்காத இதமான குளிர், குழந்தைகளோடு ஒரு நாள் இரவு தங்க சூப்பரான ஊர் . வரும் பொழுது வாழைப்பழம் வாங்க மறக்காதிங்க. மலைப்பழங்கள் அதிகமாக விலையும் பூமி மட்டுமல்லாது, விலையும் மலிவாக கிடைக்கும். நிறைய சமையல்காரர்கள் சமைத்துக் கொடுக்க இருக்கிறார்கள். சைவம் அசைவம் என இரண்டு வகையான உணவின் சுவைக்கு பஞ்சமில்லை

கொல்லிமலை

அடுத்ததாக கொல்லி மலை. கொல்லி மலையைப் பற்றி நிறைய கேள்விபட்டிருப்பீங்க. ஆனா போகணும்னு கால் வராது. ஆனா கண்டிப்பாக போயிட்டு வாங்க. பெரியவர்கள் குளித்து மகிழ அகாயகங்கை நீர்வீழ்ச்சி, சிறுவர்கள் குளித்து மகிழ மாசில்லா அருவி என ஊர் முழுவதும் கண்கொள்ளா காட்சி. இதமான குளிர்.. நிறைய ரிசார்ட்டுக்கள் இருக்கிறது.

படகு சவாரி மனதை மகிழ வைக்கும். உங்களால் முடிந்தால் மலைக்கு மேலே இருக்கும் மாசி பெரிய கருப்பண்ணன் கோவிலுக்கு சென்று வரலாம். சரி எல்லாம் முடிந்ததா? திரும்பி வரும் பொழுது மாசில்லா அருவி கிட்ட குழிப்பணியாரம் சாப்பிட மறக்காதிங்க. அப்படியே வருடத்திற்கு ஒரு முறை தேவைப்படும் அளவிற்கு அஞ்சரைப் பெட்டியில் வைக்கக் கூடிய மளிகை சாமான்கள் அனைத்தும் தரமானதாகவும், சற்று மலிவாகவும் முக்கியமா கலப்படமில்லாம உண்மையானதாகவும்  கிடைக்கும். அவற்றையும் வாங்க மறக்காதிங்க

வார இறுதிகளில் மனசை ரிலாக்ஸ் பண்ற மாதிரியான  மூன்று இடங்களையும் கொடுத்தாச்சு. கொஞ்சம் நல்லபடியா கமெண்ட் பண்ணி, பாலோ பண்ணுங்க! அடுத்த டூர் இடங்களைப் பற்றி பார்க்கலாம்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மார்கழியில் ஏன் சுபகாரியங்களைச் செய்ய கூடாது?!

From around the web