டி-20 கிரிக்கெட்! பாகிஸ்தான் சாதனையை முறியடித்து இந்தியா சாதனை!

 
அசத்தல் இந்தியா

சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் கைவசம் இருந்த சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணி சாதித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றது. இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்து கேமரூன் கிரீன் (52), டிம் டேவிட் (54) சாத்து முறையில் 187 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடி அரைசதம், விராட் கோலியின் பொறுப்பான அரைசதத்தினால் ஒரு பந்து மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இந்திய அணி 2022 டி20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்து அதிக வெற்றிகளை இது வரை பதிவு செய்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்

2021 முதல் 14 முறை இலக்கை விரட்டியதில் இந்திய அணி 13 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதே போல் 2022ம் ஆண்டில் இந்திய அணி 21 வெற்றிகளை டி20 சர்வதேசப் போட்டிகளில் பெற்றுள்ளது. இது 2021ல் பாகிஸ்தான் பெற்ற அதிகபட்சமான 20 போட்டிகள் வெற்றி சாதனையை முறியடித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web