பயங்கரம்!! பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி!! 29 பேர் மாயம்!!

 
பனிச்சரிவு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அரசு மலையேறுதல் கல்வி பயிற்சி நிறுவனமான இதில் 34 பயிற்சி மலையேறு வீரர்கள் மற்றும் 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 வீரர்கள் நேற்று முன்தினம் உத்தர்காசியில் உள்ள இமயமலையின் திரவுபதி கா கண்டா -2 சிகரத்தில் தங்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வீரர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.

பனிச்சரிவு

இது குறித்து இந்தோ-தீபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள வீரர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 29 வீரர்கள் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பனிச்சரிவு

எனவே 29 பேரை மீட்க ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு மீட்புப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இற்கிடையில் அப்பகுதியில் நிலவி வரும் வானிலை மாற்றத்தின் காரணமாகவும், மீட்பு பணியின் காரணமாகவும் உத்தரகாசி மாவட்டத்தில் மலையேற்றம் மற்றும் மலையேறுதல் நடவடிக்கைகள் அடுத்த 3  நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web