மாமூல் கேட்ட காவலரை வீடியோ எடுத்து தெறித்து ஓட விட்ட வாகன ஓட்டி!!

 
லஞ்சம்

சாலைகளில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களிடம் போக்குவரத்து காவலர் லைசன்ஸ், உரிமம், இன்சூரன்ஸ் என அனைத்தையும் செக் செய்வார். இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிப்பார்.

போக்குவரத்து மாற்றம்

இதே போல் புதுச்சேரியில் மாநில போக்குவரத்து காவல் தலைமைக் காவலர்  இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்து மாமூல் கேட்டார். அந்த வாகன ஓட்டி சமயோசிதமாக இதனை வீடியோவாக படம்பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

போக்குவரத்து தடை


அந்த வீடியோவில் 'மாநில அரசிடம் இருந்து உங்கள் பணிக்காக  மாதா மாதம் ரூ 90,000 சம்பளமாக பெறுகிறீர்கள். அதுவும் போதாமல் மாமூல் கேட்பது தவறு. உங்களுடன் சேர்ந்து இருக்கும் மற்றொரு காவலருடன் சேர்ந்து வரும் வாகனங்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுப்பதை கவனித்து வருகிறேன். இது குறித்து  டிஜிபி யிடம் புகார் அளிப்பேன்’ எனக் காவலருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

From around the web