மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!! அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!!

 
தங்கம்

இந்தியாவில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்ட பிறகு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஆனால் செப்டம்பர் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் தங்க நகை முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் நகைகளை வாங்கி குவித்து வந்தனர். ஆனால் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை மறுபடியும் உயரத் தொடங்கியுள்ளது. 

தங்கம்
என்ன தான் தங்கம் விலை அதிகரித்தாலும் பெண்களுக்கு தங்க நகைகள் மீதுள்ள மோகம் குறையாமல் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டாலும், நகைக்கடைகள் எதுவும் நஷ்டம் ஏற்படவில்லை. அந்த அளவிற்கு தங்கம் மீது மக்களுக்கு ஆசை இருந்தாலும் ஒரு பக்கம் அது பணத்தை முதலீடு செய்வதில் சிறந்த முதலீடாக இருக்கிறது. அதனால் கூட பலர் தங்கம் வாங்குகின்றனர். தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதால் தங்க நகைகளை வாங்க இப்போது இருந்தே மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். அதற்கு தகுந்தாற்போல நகைக்கடைகளும் புது புது டிசைன்களை அறிமுகம் செய்து தீபாவளி ஸ்பெஷல் என கவர்ச்சி விளம்பரங்களும் வலம் வரத் தொடங்கியுள்ளன. 

தங்கம்
இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440க்கு அதிகரித்துள்ளது.  ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து, ரூ.4,697க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து, ரூ.37,576-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,834-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 14 ரூபாய் உயர்ந்து, ரூ.3,848-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் இன்று வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ61.50 க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.61,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web