ரூ.100யைத் தாண்டியது காய்கறிகளின் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
இன்னும் 10 நாட்களுக்கு காய்கறி தட்டுப்பாடு இருக்கும்: மக்களே உஷார்..!!

தமிழகத்துக்கு தேவையான காய்கறிகளில் கேரட்டுகள் அனைத்தும்,  மார்க்கெட்டுகளுக்கு ஊட்டி, ஒசூர், கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் இருந்து கேரட் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஜூலை மாதம் வரை, 200 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த கேரட் லோடுகள், தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக குறைந்து, ஆகஸ்டில் 150 லாரிகளாகவும், தற்போது 75 லாரிகளாகவும் சரிந்துள்ளது.

இன்னும் 10 நாட்களுக்கு காய்கறி தட்டுப்பாடு இருக்கும்: மக்களே உஷார்..!!

கேரட் வரத்து குறைந்துள்ள நிலையில், பண்டிகை, திருமண சீசன் காரணமாக இதன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 2 மாதங்களில் கேரட் விலை, மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. உழவர் சந்தைகளில் ஜூலை மாதம் கிலோ 40 முதல் 43 ரூபாய் வரை விற்பனையான முதல் ரக ஊட்டி கேரட், ஆகஸ்ட் மாதத்தில் 80 முதல் 86 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று கேரட் கிலோ 120 முதல் 135 ரூபாய் வரை விற்பனையானது. 

வெளி மார்க்கெட்டில் ஜூலை மாதத்தில் கிலோ 45 முதல் 48 ரூபாய் வரை விற்றது, ஆகஸ்டில் 95 முதல் 105 ரூபாயாக உயர்ந்த கேரட், இன்று 150 முதல் 160 ரூபாயாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 15 நாட்களுக்கு இதே நிலை தான் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இன்னும் 10 நாட்களுக்கு காய்கறி தட்டுப்பாடு இருக்கும்: மக்களே உஷார்..!!

தக்காளி, முருங்கைக்காய், அவரைக்காய், வெங்காயம் உள்பட சிலவற்றின் விலையும் குறைந்து காணப்பட்டாலும், பீன்ஸ் போன்ற காய்கறிகள் அனைத்தின் விலையும் சதத்தைத் தாண்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரட்டாசி மாதம் என்பதால், இறைச்சி கடைகள் வெறிச்சோடி இருக்க, பெரும்பாலான மக்கள் சைவ சாப்பாட்டின் பக்கம் திரும்பியதும் காய்கறிகளின் இந்த விலையேற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. மழை காலம் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு ஆண்டும் காய்கறி விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்கும். அந்த வகையில் இனி வரக்கூடிய காலம் மழை காலமாக இருக்கும் என்பதால், விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

From around the web