3 வது நாளாக தொடரும் போராட்டம்!! ஜாலி ரைடு போகும் வாகன ஓட்டிகள்!!

 
போராட்டம்

இந்தியா முழுவதும் சுங்கச் சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த சுங்கச்சாவடி ஊழியர்களை குறைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை எந்தவித உடன்பாடும் எடப்படவில்லை.

போராட்டம்

இதனால் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து அந்த வழியில் செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்தாமல் செல்கின்றன. இதனால் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தங்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டம்

இதன் அடிப்படையில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக, சுங்கச்சாவடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் இன்று 3 வது நாளாக தொடர்கிறது. சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. உளுந்தூர்பேட்டையில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுங்கச்சாவடி அலுவலகத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web