தொடரும் சோகம்!! இ பைக் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பலி!!

 
சிறுவன்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உச்சம் தொட்டதை அடுத்து எலக்ட்ரிக் வாகன விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. அதே நேரத்தில் இ பைக்குகள் அவ்வப்போது நட்ட நடு சாலைகளில் தீப்பற்றி எரிவதும் வாடிக்கையாகி வருகிறது. சார்ஜ் போடும் போது அபாயங்களும் ஏற்பட்டு வருகின்றன. இதே போல் ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்து சின்னஞ்சிறு சிறுவன் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பேட்டரிபேட்டரி

மகாராஷ்டிராவில் மும்பை புறநகர் பகுதியான பல்கார் மாவட்டம் வசை பகுதியில் வசித்து வருபவர் சர்பாஸ் அன்சாரி. இவருக்கு சபீர் ஷாநவாஷ் அன்சாரி என்ற 7 வயது மகன் இருந்தார். சிறுவன் சபீர் தனது பாட்டியுடன் ஒரு அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அதிகாலை 2.30 மணியளவில் சர்பாஸ் அன்சாரி தனது இபைக்கை சிறுவன் தூங்கிய அறையில் சார்ஜ் போட்டார். அதைத்தொடர்ந்து 3 மணி நேரம் கழித்து அதிகாலை 5.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் இபைக்கின் பேட்டரி வெடித்து சிதறியது. இதில் அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் சபீர் அன்சாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


மேலும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களும் உடைந்து சிதறின. அதேபோல் சிறுவனின் பாட்டிக்கும் லேசான காயம் ஏற்பட்டது.சிறுவன் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தான். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பையும் மீறி சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 

சிறுவன்

இது குறித்து சிறுவனின் தந்தை சர்பாஸ் அன்சாரி கூறும்போது, ‘‘ஸ்கூட்டர் பேட்டரி ஓவர்ஹீட் ஆனதால்  வெடிக்கவில்லை. விற்பனையாளர்  பேட்டரியை 3 முதல் 4 மணி நேரம் வரை சார்ஜ் போட வேண்டும் என்று கூறியதால்தான் சார்ஜ் போட்டேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கூறும்போது, ‘‘விபத்தை ஏற்படுத்திய இபைக்கை ஜெய்பூரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோன்று தங்கள் செல்போனை பொது மக்கள் இரவு உறங்கும் போது சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இபைக்குகளை பாதுகாப்பான முறையில் வெட்டவெளியில் வைத்து சார்ஜ் போட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web