இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி! பயண செலவு அதிகரிக்கும் அபாயம்!

 
டாலர் இந்திய ரூபாய் வீழ்ச்சி

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது அலாரம் அடிப்பதாகவே பொருளாதார நிபுணர்கள் அலறுகிறார்கள். ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை, திவாலான நிலையில் உள்ளது. ஆசிய நாடுகளில் பாகிஸ்தானிலும் கடும் பொருளாதார தட்டுப்பாடு நிலவி வருகிறது. சீனாவும் கொரோனா தொற்று பரவலுக்குப் பின்னர் பொருளாதார நிலையில் பின்னடைந்துள்ளது. ஜப்பானிலும் தற்போது பொருளாதார சறுக்கல்கள் உள்ளன.

ஆசிய நாடுகளில் இந்தியா மட்டுமே வீறுநடைப் போட்டு வந்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இது குறித்து பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டாலர் இந்திய ரூபாய் வீழ்ச்சி
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் தனது வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் அளவுக்கு உயர்த்தியது தான் என்று கூறப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

டாலர் இந்திய ரூபாய் வீழ்ச்சி

அதன்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.82.33 என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முன்னர் ரூபாயின் மதிப்பு ரூ.81.88 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே கடந்த ஒரு வார காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியடைய செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web