மாணவிகள் முன் கெத்து காட்ட நினைத்து கீழே விழுந்த இளைஞர்! வைரல் வீடியோ!

 
டு வீலரில் கெத்து

பேருந்து நிலையத்தில் பஸ்ஸூக்காக காத்திருந்த மாணவிகளிடையே கெத்து காட்டுவதற்காக ஓடிக் கொண்டிருக்கும் பைக்கில், ஏறி நிற்க முயற்சித்த இளைஞர், கீழே விழுந்து, காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் மாணவிகள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். இதில் வாகனத்தின் பின்னால் இருந்த இளைஞர், இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்தார். அப்போது நிலை தடுமாறி அந்த இளைஞர் கீழே விழுந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

விபத்து

அந்த வீடியோவில், “இருச்சகர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மஞ்சல் சட்டை அணிந்த இளைஞர், மாணவிகளை பார்த்தவுடன் இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்கிறார். அப்போது நிலை தடுமாறி அவர் சாலையில் கீழே விழும் காட்ச” பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர் எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலானை அடுத்து நெட்டிசன்கள் பலரும் இளைஞரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web