சோகம்!! பிரபல தயாரிப்பாளர் அட்லஸ் ராமச்சந்திரன் மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
அட்லஸ் ராமச்சந்திரன்

பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான அட்லஸ் ராமச்சந்திரன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர்  அட்லஸ் ஜூவல்லரி என்ற நகைக்கடையை  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் பல வருடங்களாக நடத்தி வந்தார் .  அட்லஸ் ராமச்சந்திரன் பல மலையாளத் திரைப்படங்களை தயாரித்துள்ளார் .இவரது தயாரிப்பில் உருவான பல படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. 

இவரது தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்பட பல பிரபல மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர். பல வெற்றி படங்களை இவர் தயாரித்ததன் மூலமாக பல  பிரபலங்களின் இயக்குனர்களின் நன்மதிப்பை பெற்றார்.

இந்நிலையில் கடந்த சில நாட்கலுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் இவர் பாதிக்கப்பட்டார்.  இதனையடுத்து அட்லஸ் ராமச்சந்திரன் துபாயில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  தற்போது சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவை குடும்பத்தினர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் மறைந்த அட்லஸ் ராமச்சந்திரனுக்கு  திரைப்பட திரையுலகினர் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக  அட்லஸ் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு  ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web