அடிதூள்!! இந்திய சிறுமிகள் சாதனை!! உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் அசத்தல்!!

 
சாம்பியன்

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்ஜியாவில் பதுமி நகரில் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில்   இந்திய சிறுமிகளான ஷுபி குப்தா, ஏ.ஷார்வி  பட்டம் வென்று அசத்தல் சாதனை படைத்துள்ளனர்.  இந்தியாவின் காஸியாபாத் நகரைச் சேர்ந்த ஷுபி குப்தா 11 சுற்றுகளில் 8.5 புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக கேடட் சாம்பியன்
அதே போல் 8 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் ஏ.ஷார்வி 11 சுற்றுகளின் முடிவில் 9.5 புள்ளிகளை பெற்று  சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த போதனாவும் 9.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளார். டைபிரேக் புள்ளிகளை ஷார்வி சிறப்பாக வைத்திருந்ததால் இந்தியா வெற்றி பெற்றது. 

உலக கேடட் சாம்பியன்
8 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர்கள் பிரிவில்  கேரளாவை சேர்ந்த  சஃபின் சஃபருல்லாகான் 9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மார்க் லரி 9.5 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றார்.  ரஷ்யாவின் சவ் ஷோக்ட்ஜீவ் ரோமன் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web