இடித்து தள்ளப்பட்ட தீண்டாமை சுவர்!! போலீஸ் படை குவிப்பு!! நீடிக்கும் பதற்றநிலை!!

 
தீண்டாமை சுவர்

ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும்  தீண்டாமை  என்பது குற்றம், ஒரு பாவச் செயல், மனித தன்மையற்ற செயல் என சிறுபிள்ளை முதல் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இருந்த போதிலும் பல பகுதிகளிலும் இன்னமும் தீண்டாமை புரையோடி போயிருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அதே போல் ஒரு சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தோக்கம்பூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு ஆதி திராவிட குடியிருப்பை ஒட்டியவாறு  90 அடி நீளமான 8 அடி உயர தீண்டாமை சுவர் ஒன்றை ஊர் பெரியவர்கள் சிலர் எழுப்பினர்.

தீண்டாமை சுவர்

இந்த சுவரை இடித்து தள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். அதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அந்த கிராமத்து மக்களும், இந்த சுவர் தீண்டாமை சுவர் என்று கூறி அதனை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் பேரில் 100க்கும் மேற்பட்ட போலீஸ் துணையுடன், இன்று காலை 5 மணியளவில் தீண்டாமை சுவரை வருவாய்த்துறையினர் 5க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடித்துத் தள்ளினர்.

போலீஸ்

இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் தீண்டாமை சுவரால் ஏற்பட்டு வந்த பல்வேறு சர்ச்சைகள் தீர்ந்துபோயுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை போலீசார் 5 பொக்லைன் எந்திரங்கள் துணையுடன் இடித்து தள்ளியதால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web