மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி!! தொடரும் சோகம்!!

 
யானை


நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதர்காடு பகுதியில் ஒற்றை ஆண் யானை ஒன்று கடந்த சில நாட்களாக அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து வந்தது. 6 வயதான இந்த ஆண் யானை நேற்று இரவு திடீரென்று அங்குள்ள எஸ்டேட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பாக்கு மரத்தை இழுத்து சாய்த்து வளைத்துள்ளது. இதனால் பாக்கு மரத்திற்கு மேல் சென்று கொண்டிருந்த மின் கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது.

மின்சாரம்

இதில் யானை மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து பிதர்காடு வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.இதற்கிடையில் அப்பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் வனச்சரகர் (பொறுப்பு) அய்யனார், வனவர்கள் ஜார்ஜ் பிரவீன்சன், பெலிக்ஸ், வன காப்பாளர் மில்டன்பிரபு மற்றும் வனத்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் காட்டு யானையை ஆய்வு செய்தனர்.


அப்போது நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், காட்டு யானை உணவு தேவைக்காக மரத்தை சாய்த்துள்ளது. அப்போது அறுந்து விழுந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து யானை இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து யானையின் உடலை வனஅலுவலர்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பக திட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.

உதகை நீலகிரி

அதற்காக கால்நடை டாக்டர்கள் ராஜேஸ்குமார், லாவண்யா, சரண்யா ஆகியோர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், உடல் அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உணவு தேடி வந்த யானை மின்சாரம் பாய்ந்து பலியானதால் கவலை அடைந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web