உலகப் புகழ்பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

 
குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

குலசேகரபட்டினம் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் உலக பிரசித்தி பெற்ற ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். 

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

அதன்படி இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக பக்தர்கள் சூழ தொடங்கியது. அதற்கு முன்னதாக  காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும்  ஆராதனையும் நடைபெற்றது. அதை  தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று மதியம் முதல் இரவு வரையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். இந்த காலகட்டத்தில் அம்மன் தினமும் இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்.

திருவிழாவின் 10ம் திருநாளான சூரசம்ஹாரம் வருகிற அக்டோபர் மாதம் 5-ம்தேதி நள்ளிரவு 12 மணியளவில் நடைபெறுகிறது.  திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சென்னிற ஆடை அணிந்து நேற்று காலை முதலே படையெடுக்க தொடங்கினார்கள்.

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். 

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு பல லட்சம் வரையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web