தவெக 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து விபத்து... அப்பளமாய் நொறுங்கிய கார்!

 
தவெக

 தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில்  நாளை 21ம் தேதி  வியாழக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.  506 ஏக்கரில் மாநாட்டு திடல், 2 பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பெண்களுக்கான “பிங்க் ரூம்”  என களைகட்ட தொடங்கியுள்ளது.

தவெக

இறுதிக்கட்ட பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன.   ஒவ்வொன்றையும் மேற்பார்வையிட மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.  மாநாட்டு முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, மாநாட்டில்  அதை விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக கொடிக்கம்பம் ராட்சத கிரேன் மூலம் நடப்பட்டது.

தவெக

அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்தது. தவெக நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?