10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... அதிமுக நிர்வாகி, இன்ஸ்பெக்டர் கைது!
சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் 10 வயது சிறுமி ஆகஸ்ட் 29ம் தேதி திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம், பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் அவரது பெற்றோர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுவன் மீது புகார் அளித்தனர். சிறுமியின் பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், பகல் மற்றும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து அவர்களை மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.
தங்களின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்ததோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் பெயரை நீக்கும்படி போலீசார் அச்சுறுத்தினர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக வெளியிட்டனர்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதேபோல் சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டனர். இந்த உத்தரவுப்படி இணை கமிஷனர் சரோஜ்குமார் தாக்கூர், அண்ணாநகர் துணை கமிஷனர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், 10 வயது சிறுமியின் பெற்றோருக்கு காவல் நிலையத்தில் நேர்ந்த கொடுமை குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட நபரின் முன்பு வைத்து புகார் அளித்த சிறுமியின் அப்பா – அம்மா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு ஆதரவாக அண்ணாநகர் 103வது வார்டு அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் நேரடியாக மகளிர் காவல்நிலையம் வந்து புகார் கொடுத்த பெற்றோருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன் அவர் குற்றவாளியை காவல் நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்றதோடு, சிறுமியிடம் நண்பராக பழகிய ஒரு 14 வயது சிறுவனை போலியாக பலாத்கார வழக்கில் கைது செய்யும்படியும் இன்ஸ்பெக்டரிடம் கூறியுள்ளார்.
அதன் பிறகே புகாரில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயரை நீக்க அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி வலியுறுத்தி பெற்றோரிடம் தாக்குதல் நடத்தி உள்ளார். போலியான குற்றவாளியை கைது செய்துள்ளார். காவல் ஆய்வாளர் ராஜி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை தாக்கி உள்ளார். இந்த தாக்குதலை எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி குற்றம்சாட்டப்பட்ட நபர் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதோடு, போலியான குற்றவாளியை கைது செய்யவும் வைத்த அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வுப் படை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளது. அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!