பாறையின் நடுவே சிக்கிக்கொண்டிருந்த 1,300 ஆண்டுகள் பழமையான வாள்.. திடீரென மாயமானதால் அதிர்ச்சி!

 
 பழங்கால வாள்

தென்மேற்கு பிரான்சில் உள்ள ரோகமடோர் நகரில் 1,300 ஆண்டுகளாக பாறையில் சிக்கிக்கொண்டிருந்த பழங்கால வாள் மர்மமான முறையில் காணாமல் போனதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.வாள் காணாமல் போன பின்னர், அது திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், மாயமான வாள் காணாமல் போனது குறித்து பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரெஞ்சு இலக்கியத்தில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான படைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

தற்போது காணாமல் போனது மர்மமாக உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் புனித ரோமானியப் பேரரசர் சார்லமேனுக்கு ஒரு தேவதை வாளை பரிசாக அளித்ததாக புராணக்கதை கூறுகிறது.இந்த ஆயுதம் மர்மமான முறையில் காணாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாலும், தரையில் இருந்து சுமார் 100 அடி உயரத்தில் பாறை சுவரில் சிக்கிக்கொண்டிருந்த வாளை ஒரு திருடன் வாளை எப்படி எடுத்திருப்பான் என்பது போலீசாரை திகைக்க வைத்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web