தினமும் போதை மாத்திரை... பெற்ற தாயே 13 வயது மகளை விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை... தாய், பெரியம்மா, சித்தி கைது!

 
சிறுமி

மதுரையில் 13 வயது சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த மே மாதம் சிறுமியை அவரது தாய் கடச்சனேந்தலில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சில வாரங்கக்கு பிறகு சிறுமியை மீண்டும் பாட்டி வீட்டுக்கு அழைத்துவந்து விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அப்போது சிறுமி பெரும் சோகம் மற்றும் அதிர்ச்சியில் இருந்துள்ளார். இது குறித்து சிறுமியிடம் பாட்டி கேட்டுள்ளார். அப்போது, தாய் மற்றும் உறவினர்கள் சிலர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறி சிறுமி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி தனது ஊரில் இருந்த உறவினர்களிடம் கூறியுள்ளார்.

சிறுமி

பின்னர், பேத்தியை மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச்சென்று புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. சிறுமியின் புகாரில், என்னை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு தாய் கூறினார். தான் மறுத்தபோது சித்தி, பெரியம்மா உள்ளிட்டோர் கட்டாயப்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது என்னை கடுமையாக தாக்கினர்.

மேலும், போதை மாத்திரைகளை கொடுத்து என்னை மயக்க நிலைக்கு கொண்டு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். என்னை புவனேஷ், அருண்பாண்டி உள்ளிட்ட 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். என் உடலில் சூடு வைத்தும் கொடுமை செய்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நான் அங்கிருந்து தப்பி பாட்டி வீட்டுக்கு வந்துவிட்டேன், என கூறியிருந்தார். 

சிறுமி

இதையடுத்து அந்த சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்த போலீசார் விசாரணையில் இறங்கினர். சிறுமியின் கொடூர தாய், பெரியம்மா, சித்தி மற்றும் புவனேஷ், அருண்பாண்டி, மணிகண்டன், சேகர் உள்ளிட்ட 8 பேரை அதிரடியாக தூக்கினர் போலீசார்.

அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து தாயே பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web