பகீர்... ஓடும் மெட்ரோ ரயிலில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு!

 
டெல்லி மெட்ரோ

 டெல்லி மெட்ரோ ரயிலில் தொடர்ந்து குற்றவியல் மற்றும் பாலியல் சம்பவங்கள் நடந்து பெரும் சர்ச்சையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த 16 வயது சிறுவன்  'டெல்லி மெட்ரோ ரயிலில் நான் பயணித்த போது, எனது அருகில் அமர்ந்திருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், எனது அந்தரங்க உறுப்புகளைத் தொட முயன்றார்.


நான் விலகி அமர்ந்தேன். ராஜீவ் சவுக் ரயில் நிலையம் வந்தவுடன், நான் ரயிலில் இருந்து இறங்கிச் சென்றேன். அப்போது அந்த நபர் என்னைப் பின்தொடர்ந்து வந்தார்.
ஒரு வழியாக நான் அந்த நபரிடம் இருந்து தப்பினேன்' என  பதிவிட்டிருந்தார். இது குறித்து வெளியான வீடியோவை பார்த்த  போலீசார் சிறுவனிடம் பாலியல் சேட்டை மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளனர். அத்துடன் இது குறித்து  துணை போலீஸ் கமிஷனர் (மெட்ரோ) ராம்கோபால் நாயக்   'சிறுவனின் பதிவின்படி, மேற்கண்ட சம்பவம் ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்துள்ளது.

டெல்லி மெட்ரோ

குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்தர் கவுதம் என்ற பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்.  ராஜீவ் சவுக் முதல் ஜஹாங்கீர் பூரி வரையிலான 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே குற்றவாளியை கண்டறிய முடிந்தது.  டெல்லியில் உள்ள அம்பேத்கர் காலனியில் வசித்து வருவதும், அவர் மீது வேறு ஏதும் குற்றவழக்குகள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. கவுதம்  மீது போக்சோ உட்பட பல  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web