17 வயது சிறுமிக்கு நுரையீரலில் ஓட்டை... வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பிடித்ததால் பெரும் சோகம்!

 
நுரையீரல் ஓட்டை
 

பிரிட்டனில் வசித்து வரும் சிறுமிக்கு வயது 17. இவருடைய  நுரையீரலில் திடீரென ஓட்டை விழுந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதற்கான காரணத்தை கேட்டு மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்படி அந்தச் சிறுமி ஒரு வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் வரை பிடிப்பாராம்.  இந்த சிறுமி  மே மாதம் 11ம் தேதி   தோழி ஒருவரின் வீட்டில் இருந்த போது  கடுமையான வயிற்று வலி காரணமாக மயங்கி விழுந்தார்.
உடனடியாக சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.  

நுரையீரல் ஓட்டை

அப்போது நுரையீரலில் ஓட்டை விழுந்ததாக மருத்துவர்கள் கூறினர். இந்த சிறுமி அளவுக்கு அதிகமான சிகரெட் புகையை பிடித்ததை கேட்டு மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்தனர்.  அதன்படி ஒரு வாரத்துக்கு 4000 பஃப்க்கள் வரை உள்ளிழுத்ததாக கூறியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து நுரையீரல் ஓட்டை பெரிதாகாமல் இருப்பதற்காக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் மூலம் நுரையீரலில் ஒரு பாதியை வெட்டி எடுத்து விட்டனர்.  சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பிழைத்துவிட்டார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web