22 வயது இளம்பெண்ணின் முதுகுத்தண்டு உருக்குலைவை அறுவை சிகிச்சை மூலம் சீராக்கி சாதனை.... !

 
அறுவை சிகிச்சை


 
மிகக் கடுமையான முதுகுத்தண்டு வலியால் இலங்கையை சேர்ந்த 22 வயது இளம்பெண் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.  விரைப்பான முதுகுத்தண்டு பக்கவளைவு பாதிப்பின் காரணமாக கடுமையான முதுகுவலி இந்த இளம் பெண்ணிற்கு இருந்தது.  காவேரி மருத்துவமனையின் மருத்துவ வல்லுநர்களால் அந்த பெண்ணுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனை


இதுகுறித்து காவேரி மருத்துவமனை  “ 22 வயதான இலங்கையில் வசித்து வரும் இளம்பெண்ணின்  முதுகுத்தண்டு 130 டிகிரி அளவிற்கு வளைந்திருந்தது. இதன் காரணமாக அப் பெண்ணின் தினசரி செயல்பாடுகளும், வாழ்க்கைத்தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.  130 டிகிரி அளவிற்கு வளைந்திருந்த முதுகுத்தண்டை 60 டிகிரி என்ற அளவிற்கு குறைத்து சரிசெய்யப்பட்டுள்ளது.  முதுகுத்தண்டின் மேம்பட்ட, நுட்பமான உத்திகளை பயன்படுத்தி முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் திலிப் சந்த் ராஜா மற்றும் நிபுணத்துவமிக்க பிற மருத்துவர்களின் குழுவும் பிற தொழில்முறை பணியாளர்களும் இந்த இளம் பெண்ணின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவேரி மருத்துவமனை

9 மணி நேரங்கள் வரை நீடித்த இந்த மாரத்தான் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவித்துள்ளது. சரியான திட்டமிடலும், தெளிவான அணுகுமுறையும் இந்த இளம் பெண்ணிற்கு சிறப்பான சிகிச்சை பலன் கிடைப்பதை உறுதி செய்துள்ளது.  இப்பெண்ணின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் மற்றும் நம்பிக்கையை மீண்டும் வலுவாக நிலைநாட்டவும் உதவியிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!