பாம்பை மென்று துப்பிய 3 வயது சிறுவன்! அலறியடித்து மருத்துவமனைக்கு ஓடிய பெற்றோர்!

 
ஆயுஷ்

மூன்று வயது சிறுவன் ஒருவன், பாம்பைக் கடித்து மென்று துப்பிய சம்பவத்தில் பெற்றோர் அலறியடித்து துடிதுடித்தப்படியே பையில் இறந்து போன பாம்பையும் போட்டுக் கொண்டு, சிறுவனையும் வாரி அணைத்தப்படியே மருத்துவமனைக்கு ஓடினார்கள். 24 மணி நேர கண்காணிப்பிற்கு பின்னர், சிறுவன் தற்போது நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னக் குழந்தைகளை வளர்ப்பது பெரிய சவால் தான். கூட்டுக் குடும்பமாக இருந்த அக்காலத்தில் வீட்டிற்கு 10, 15 பிள்ளைகள் இருந்தாலும் அசால்ட்டாக வளர்த்து விட்டனர். வீட்டிற்கு ஒன்று அல்லது 2 பிள்ளைகள் இருந்தாலும் பெற்றோர் பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது. அதிலும் நடக்க ஆரம்பித்த நாள் முதல் பள்ளி செல்லும் வரையிலும் பெற்றோர்கள்படும் பாடு சொல்லி மாளாது.  சிறிது நேரம் வெளியில்  விளையாட சென்றாலும் எதையாவது எடுத்து வாய்க்குள் போட்டு விடுவதோ, அல்லது எதாவது ஆபத்தில் சிக்கிக் கொள்வதோ நடந்து விடுகிறது.

ஆயுஷ்

அதே போல் 3 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பை பிடித்து கடித்து தின்று விட்டான். பெற்றோர்கள் அச்சத்துடன் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.   உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ் குமார். இவருடைய 3 வயது மகன் ஆயுஷ். இவன் வழக்கம் போல்   வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்தான்.

பேரனை கவனிக்க சென்ற பாட்டி திடீரென ஐயோ என்னத்தையோ சாப்பிடறானே? ஓடிவாங்க என கத்தி கூச்சலிட்டார்.    உடனே சிறுவனின் பெற்றோர்கள் ஓடி வந்து பார்த்தனர்.  சிறுவன் வாயில் எதையோ போட்டு மென்று கொண்டு இருந்தான்.  அதை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த பாட்டி, அதனை வாயில் இருந்து வெளியே இழுத்த போது தான் அது பாம்பு எனத் தெரிய வந்தது .  

ஆம்புலன்ஸ்

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இறந்த பாம்பை பையில் போட்டு குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினர். 24 மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு குழந்தை அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை நலமாக இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web