என்னை விட்டு போயிட்டியே.. பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி... கதறித் துடித்த பெற்றோர்!!

நேற்று நவம்பர் 12ம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி தீபாவளி கொண்டாடினர். பாதுகாப்பு , காற்று மாசுபாடு காரணமாக தமிழகத்தில் காலை 6மணி முதல் 7மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கத்தில் பட்டாசு வெடித்து 4 வயது குழந்தை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரமேஷ் என்பவரின் 4 வயது மகள் நவிஷ்கா பட்டாசு வெடித்தபோது படுகாயம் அடைந்து உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நவிஷ்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீபாவளியை முன்னிட்டு தந்தை ரமேஷும், உறவினர்களும் விதவிதமான பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்து கொண்டிருக்கும் போது சிறுமி நவிஷ்கா, அதன் அருகே சென்றுவிட்டார்.
அவரின் கை அருகே பட்டாசு வெடித்ததில் சிறுமியின் கை சிதறியதாக தெரிகிறது. இதனால் நவிஷ்கா வலியில் அலறி துடித்தார். உடனடியாக அவரது பெற்றோரும், உறவினர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிக்சை பலனின்றி சிறுமி நவிஷ்கா உயிரிழந்தார். இதை அறிந்து சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!