5 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி... பெரும் சோகம்!
தமிழகத்தில் ஆவடி கோயில்பதாகை மாடவீதி தெருவில் வசித்து வருபவர்கள் ஆனந்தராஜன் - மோனிஷா தம்பதியர். இவர்களது மகன் 5 வயது பிரித்திவன் ஆவடியிலுள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மோனிஷா தனது மகனை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரித்திவன், மூடி இல்லாத 50 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் தவறி விழுந்தார். மோனிஷா, மகனை காணவில்லை என தேடிய போது கிணற்றில் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுதார். இவரது அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் கிடந்த சிறுவனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆவடி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரித்திவன் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சிறுவன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!