58 வருஷ கனவு.. ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் தங்கம் வென்று இந்தியா சாதனை!

 
பேட்மிண்டன்

அது ஆச்சு 58 வருஷம். முன்புக்கு முன்பு, 1965ல் ஆசிய பேட்மிண்டன் போட்டியில் தனி ஒருவராக தங்கம் வென்று ஒற்றையர் பிரிவில் சாதித்திருந்தார் தினேஷ். அதன் பிறகு சுமார் 58 வருடங்களாக அவரது சாதனை எந்தவொரு இந்தியராலும் தகர்க்க முடியாமலேயே இருந்தது. இதுவரையில் தகர்க்க முடியாத சாதனையாகவே இருந்தும் வருகிறது. ஆமாம்.. இன்னும் ஒற்றையர் பிரிவில் எந்தவொரு இந்தியரும் தங்கம் வென்றதில்லை. இரட்டையர் பிரிவில் இந்தியா அடுத்த தங்கத்தை வென்றிருக்கிறது. இரண்டாவது தங்கத்தை வெல்வதற்கான கால இடைவெளி 58 வருடங்கள். தற்போது துபாயில் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாட்டு வீரர், வீராங்கனைகள் பலரும் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.   

அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஓங் யியூ சின்-டியோ  ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி முதல் செட்டை கைப்பற்றியபோதும், இரண்டாவது செட்டை இழந்தது. இதனால் மூன்றாவது செட்டில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு நாட்டு வீரர்களும் முனைப்பு காட்டினர்.

பேட்மிண்டன்

எனினும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம், 16-21, 21-17, 21-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்த சீசனில் சாத்விக்-சிராக் வென்றுள்ள இரண்டாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

இதற்கு முன்பு லக்னோவில் 1965ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின்னர் முதல் முறையாக 58 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பேட்மிண்டன்

ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் தவிர, சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web