காவல் நிலையத்திற்குள் புகுந்த 7 அடி சாரைப்பாம்பு!
கோவில்பட்டியில் காவல் நிலையத்திற்குள் நுழைந்த 7 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கோவில்பட்டி அரசு அலுவலக சாலையில் போக்குவரத்து காவல் நிலையம் உள்ளது. அங்குள்ள வாகை மரத்தின் மீது நேற்று மதியம் 3 மணி அளவில் பாம்பு ஒன்று இருப்பதை அந்த வழியாக சென்ற முதியவர் ஒருவர் பார்த்து அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, மரத்தில் இருந்தது சாரைப்பாம்பு என தெரியவந்தது. அதனை பிடிக்க முயன்றபோது வாகை மரத்திலிருந்து, அருகில் இருந்த வேப்ப மரத்திற்கு தாவியது. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பாம்பை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
அப்போது அந்த வழியாக வந்த நரிக்குறவர் முனியசாமி தனது கையில் இருந்த கவட்டையுடன் மரத்தின் மீது ஏறினார். பின்னர் கவட்டையால் பாம்பை அடித்தார். இதனால் மரத்திலிருந்த பாம்பு திடீரென பாய்ந்து காவல் நிலையத்தின் முன்பு விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் கீழே விழுந்த 7 அடி நீளமுள்ள சாரப்பாம்பை, லாவகமாக பிடித்து சாக்குப் பையில் போட்டனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
