9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு... வாலிபருக்கு 10 வருட சிறை தண்டனை!

 
பாலியல்

செங்கல்பட்டு மாவட்டம், துரைப்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

சென்னை, துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 29). கூலி தொழிலாளியான இவர் கடந்த 8.04.2015 அன்று 9 வயது சிறுமியிடம் கை, கால்களை கட்டிக்கொண்டு விளையாடலாம் என கூறி அந்த சிறுமியின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு பலவந்தமாக பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார்.

பாலியல்

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயாரிடம் கதறி அழுதப்படி கூறியுள்ளார். உடனே அந்த சிறுமியின் தாய் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி நசிமா பானு நேற்று தீர்ப்பு கூறினார்.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

அதில் முனியப்பனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி வாதாடினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?