தொலைதூர காதலர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்.. வைரலாகும் ரிமோட் கிஸ்ஸிங் டிவைஸ்!

 
மோட் கிஸ்ஸிங் டிவைஸ்

தொலைதூர காதலர்கள் உண்மையான முத்தங்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் ரிமோட் கிஸ்ஸிங் டிவைஸ் என்ற புதிய கருவியை சீனாவின் சான்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜியாங் ஜாங்லி கண்டுபிடித்துள்ளார். இந்த சாதனம் தற்போது சீனாவில் பிரபலமாகி வரும் நிலையில், ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து, செல்போனில் சாதனத்தை இணைத்து, உள்ளே சிலிகான் உதடுகளை முத்தமிடுவதன் மூலம், பிரஷர் சென்சார் ஆக்சுவேட்டர் உண்மையான முத்தத்தை உணர முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால், சிலிக்கானை வைத்து மனித உதடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு அதில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 'சிலிக்கான் லிப்ஸ்' கொண்ட பிரஷர் சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்களுடன் இந்த கான்ட்ராப்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் பயனரின் உதடுகளின் அழுத்தம், இயக்கம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இக்கருவி உண்மையான மனித முத்தத்தை பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை 288 யுவான், இந்திய மதிப்பில் ₹ 3,433 ஆகும்.

மேலும், இந்த ரிமோட் கிஸ்ஸிங் சாதனத்தைப் பயன்படுத்த பயனர்கள் அதற்காக உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, மொபைலின் சார்ஜிங் போர்ட்டுடன் சாதனத்தை இணைக்க வேண்டும். பயன்பாட்டின் மூலம் தங்கள் காதலருடன் இணையத்துடன் இணைந்த பிறகு, அவர்கள் வீடியோ அழைப்பைத் தொடங்கலாம். பின்னர் அவர்கள் ஒரே செயலி மூலம் தங்கள் முத்தங்களின் நகல்களை ஒருவருக்கொருவர் அனுப்பலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சாதனத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் ஜியாங் சோங்லி, தனது காதலியுடன் நீண்ட தூர உறவில் இருந்ததாகவும், தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் என்பதால் இந்த புதிய வகை சாதனத்தை உருவாக்க உத்வேகம் பெற்றதாகவும் கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web