லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து; 9 பேர் பலி!
இன்று காலை பெங்களுரூவில் இருந்து திருப்பதி நோக்கி சென்றுக் கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று கோலார் அருகே சென்றுக் கொண்டிருந்த போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து புறப்பட்ட இந்த சொகுசு பேருந்து கோலார் அருகே சென்று கொண்டிருந்த போது டிப்பர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பேருந்து உருக்குலைந்து முற்றிலும் நொறுங்கியது. பேருந்தில் பயணித்தவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்து தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
