லாரி மீது மோதி அப்பளமாய் நொறுங்கிய பேருந்து... 19 பேர் பலியான சோகம்!

 
பேருந்து விபத்து

லாரி மீது மோதிய வேகத்தில் அப்பளமாய் நொறுங்கிய பேருந்து, பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. கேமரூனில் நடைப்பெற்ற இந்த கோர விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உலகை உலுக்கிய இந்த விபத்து நடைப்பெற்ற இடத்தில் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. பலர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


கேமரூனின் நாட்டின் இசிகா நகரில் இருந்து புறப்பட்ட சொகுசு பேருந்து ஒன்று, டவ்லா - இடா சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில், அப்பளமாய் நொறுங்கி பெரும் விபத்துக்குள்ளானது.

Accident

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநரின் கவனக் குறைவே விபத்துக்கான காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்