கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் பாய்ந்த கார்... 10ம் வகுப்பு மாணவி மரணம்!

 
ஆண்டியா
 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கோட்டக்கரையில் தறிக்கெட்டு ஓடிய கார், திடீரென கட்டுபாட்டை இழந்த நிலையில் கடைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 16 வயது பள்ளி மாணவி ஆண்டியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொல்லம் மாவட்டம் கோட்டைக்கரை லோவர் கிரிகம் நியூ ஹவுஸைச் சேர்ந்தவர் பிஸ்மி. இவரது மகள் ஆண்டியா (16). 

விபத்து
பிஸ்மியும், அவரது தாயார் சோஷாம்மா(76)வும், மகள் ஆண்டியாவும் காரில் சென்றிருந்த நிலையில், இந்த விபத்து எம்.சி. சாலையில் வாளகம் வில்லேஜ் அலுவலகத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. தனது தாயார் ஷோஷாம்மாயை வெஞ்சாரம்மூட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. 

போலீஸ்
பிஸ்மி ஓட்டிச் சென்ற கார் , திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடையின் படிகளுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஆண்டியாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே ஆண்டியா பலியானார். பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த நிலையில், பிளஸ் ஒன் வகுப்பில் சேர்வதற்காக ஆன்டியா காத்திருந்துள்ளார். ஆண்டியாவுக்கு அண்ட்ரிட்டா, ஆன்சன் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த பிஸ்மியும், அவரது தாயாரும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web