பெரும் பரபரப்பு... நடுரோட்டில் திகுதிகுவென தீப்பிடித்து எரியத் தொடங்கிய கார்... !

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வருபவர் கேசவ மூர்த்தி இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு திருப்பூர்-தாராபுரம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன்பகுதியிலிருந்து புகை வெளியேறியது.
இதனையடுத்து திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. தீப்பற்றியதும் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக கேசவ மூர்த்தி காரில் இருந்து இறங்கி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!