நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரியத் தொடங்கிய கார்... பகீர்!

 
கார் தீவிபத்து

 தெலங்கானா மாநிலத்தில் நேற்று நள்ளிரவில்  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரில் பயணம் செய்த 3 பேரும் சுதாரித்து காரை நிறுத்திவிட்டு  இறங்கி ஓட்டம் பிடித்தனர்.இதனால் இவர்கள் மூவரும்  அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கர்னூலுக்கு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று  சென்று கொண்டிருந்தது.

கார் தீவிபத்து
இந்த கார் வனபர்த்தி மாவட்டம் கொத்தகோட்டாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்புறத்தில் புகை வந்தது. இதனால்  காரில் வந்த 3 பேர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.  ஒரு சில விநாடிகளிலேயே  கார் முழுவதும் மளமவென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து  தீயணைப்பு வீரர்கள் வந்து சேர்வதற்குள்  கார் முற்றிலும் எரிந்து தீயில் கருகி சாம்பலானது.  தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web