அதிர்ச்சி... நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்... அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்!

 
எரிந்த கார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக காரில் பயணம் செய்த 3 பேர் உயிர் தப்பினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (52). இவர் இறஞ்சி கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி அஞ்சலை ஆகியோர் நேற்று மதியம் இறஞ்சியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்று விட்டு, மீண்டும் தனது உறவினர் ஊரான காஞ்சிராங்குளம் கிராமத்தில் வளையகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சாமிநாதன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

போலீஸ்

அப்போது வேப்பூர் கூட்ரோட்டில் காரை நிறுத்தி விட்டு வளையகாப்புக்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்கள் வாங்கும் போது திடீரென்று கார் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் வேப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வந்து காரின் பற்றிய தீயை அணைத்தனர். விபத்தில் கார் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web