வைரலாகும் வீடியோ... நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தபடியே தானாக ஓடிய கார்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் உள்ள உயர்மட்ட சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தி விட்டு, காரில் இருந்து அவசரமாக கீழே இறங்கி ஓட்டம் பிடித்தார். ஆனால் அவசரத்தில் காரின் ஹேண்ட் பிரேக்கைப் போடாததால் டிரைவர் இல்லாத அந்த கார் தீப்பற்றியபடி சாலையில் நடுரோட்டில் நகர்ந்து ஓடத் தொடங்கியது.
@gharkekalesh pic.twitter.com/VVuBFH8xFU
— Arhant Shelby (@Arhantt_pvt) October 13, 2024
இதனால் சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். சாலையில் தங்களை நோக்கி தீப்பிடித்து எரிந்தபடியே கார் ஒன்று வந்துக் கொண்டிருப்பதை பார்த்த பிற வாகன ஓட்டிகள் அவசர அவசரமாக தங்கள் வாகனங்களை நகர்த்தி, எரிந்தபடியே வந்துக் கொண்டிருந்த காருக்கு வழிவிட்டனர். சிறிது நேரம் இவ்வாறு தீப்பிழம்புடன் புகையை கக்கியபடி சென்றுகொண்டிருந்த கார், பாலத்தின் மறுபகுதி வரை சென்று டிவைடரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீப்பிடித்த கார் சென்றபோது அந்த சாலையில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மின்சார வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம் என்று போலீசார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
