வீட்டு வாசலில் திடீரென திகுதிகுவென பற்றி எரிந்த கார்!
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் 28 வயது அஜித். இன்று காலை தனது காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்ற போது திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்ததுடன் திகுதிகுவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அஜித், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
அதே நேரத்தில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காரின் முன்பக்கம் மளமளவென எரிய தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
காரின் முன்பக்கம் முழுவதுவாக தீயில் கருகிவிட்டது. அத்துடன் காரில் வைக்காட்டிருந்த அஜித்தின் செல்போனும் தீயில் கருகியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் காரில் ஏற்பட்ட தீப்பொறியே விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!