தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு லாரி... சாலையில் உருண்டோடிய பீர்பாட்டில்கள்!

 
லாரி விபத்து

இன்று கூடுவாஞ்சேரியில் அதிகாலை பெட்ரோல் பங்க் வாசலில் பீர்பாட்டில்களை  ஏற்றிக்கொண்டு  வந்த லாரி நிலைதடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில்  பீர்பாட்டில்கள் அனைத்தும் உடைந்து சிதறியது. குடிமகன்கள் உடைந்த பாட்டில்களில் எதாவது சரக்கு கிடைக்குமா என குவியத்தொடங்கினார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் லாரி டிரைவர் பிச்சமுத்துவிடம் விசாரணை மேற்கொண்டனர். இவர் மதுரையில் இருந்து டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் சேகரிக்கப்பட்ட காலி பீர்பாட்டில் மற்றும் மதுபாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு  சென்னைக்கு  வந்து கொண்டிருந்தார். இன்று அதிகாலை கூடுவாஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையில்   டிரைவர்  கட்டுப்பாட்டை இழந்த லாரி, தனியார் பெட்ரோல் பங்க் நுழைவுவாயிலின் முன்பு தலைகுப்புற கவிழ்ந்தது.

ஆம்புலன்ஸ்
இவ்விபத்தில் லாரிக்குள் இருந்த காலி பீர்பாட்டில்கள் உடைந்து சுக்குநூறாகின. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.  லாரியின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பிச்சைமுத்து படுகாயங்களுடன் அலறி பெருங்கூச்சலிட்டார். படுகாயம் அடைந்த டிரைவர் பிச்சைமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து காரணமாக  அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web