டின் பீரை திறக்கும் முதலை... ஆச்சர்ய வீடியோ!

 
முதலை

 தினமும் சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்கள் பெரும் வைரலாகி வருகின்றன. குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில்  ஆச்சரியப்படத்தக்க வகையில்  முதலை ஒன்று பீர் கேனை திறக்கும் வீடியோ வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில்  அமெரிக்க நாட்டில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் இளைஞர்  ஒருவர் தனது நண்பர்களுடன்  படகில் ஜாலியாக ரவுண்ட் வருகிறார்.  அப்போது பீர் கேன் ஒன்றினை திறக்க அந்த இளைஞர்   முயற்சி செய்கிறார்.ஆனால் அவரால் அதை திறக்க முடியாததால் கடலில் சில உணவுப் பொருட்களை வீசுகிறார். அப்போது முதலை ஒன்று வந்தது.

அந்த சமயத்தில் முதலையின் வாயில் பீர் கேனை அந்த இளைஞர் வைக்கிறார். முதலை  உடனடியாக அந்த கேனைத் திறந்தது. பின்னர் அதை தன்னுடைய நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்த  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும்  பல வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web