29 வயசு தான்... இளம்நடிகை திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்!

இன்று நடிகை வைபவி, ஹிமாச்சல் பிரதேசத்துக்கு காதலருடன் காரில் சென்ற போது விபத்துக்குள்ளாகி, சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், பிரபல பெங்காலி நடிகை சுசிந்திரா தாஸ்குப்தாவும் தனது 29வது வயதில் மரணமடைந்துள்ளார்.
பெங்கால் சீரியல்களில் நடித்து வந்த நடிகை சுசிந்திரா, அதன் பின்னர், பெங்காலி மொழி படங்களிலும் நடித்து வந்தார். படப்பிடிப்பு முடிந்து தனது வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நடிகை சுசீந்திரா, ஷூட்டிங் ஒன்றில் பங்கேற்று விட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, எதிர்பாராத விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில்நடிகை சுசிந்திரா மீது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
படப்பிடிப்பு முடிந்து, கொல்கத்தாவின் பராநகர் கோஷ்பாரா பகுதியில் சுசிந்திரா தாஸ்குப்தா சென்று கொண்டிருந்த போது, அவரது வண்டியின் மீதுபின்னால் வந்த இன்னொரு இரு சக்கர வாகனம் மோதியது. அந்த அதிர்ச்சியில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, சுசிந்திரா தாஸ்குப்தா மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே சுசிந்திரா தாஸ்குப்தாவின் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!