சென்னையில் பிரபல நடிகை காலமானார்... திரைத்துறையினர் இரங்கல்!

 
கிரிஜா

ஜீவிதா நவுகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம்  சினிமாவில் அறிமுகமான பிரபல மலையாள நடிகை பேபி கிரிஜா சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய அறிமுகப்படத்தைத் தொடர்ந்து  அச்சன், விஷப் பிண்டே விலி, பிரேமலேகா, அவன் வரன்னு, புத்திர தர்மம் என அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி சென்னையில் உள்ள ஒரு வங்கியில்  பணிபுரிந்து  வந்தார்‌.

கிரிஜா
இவருடைய கணவர் முன்பே உயிரிழந்த   நிலையில் இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள்  யாரும் இல்லை. இந்நிலையில் முன்னாள் மலையாள நடிகையான கிரிஜா நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது  82. மேலும் அவருடைய மறைவுக்கு திரை நட்சத்திரங்கள், உறவினர்கள், நண்பர்கள் பலரும்   இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web