பிரபல பாலிவுட் நடிகை பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்பு... திரைத்துறையில் பெரும் சோகம்!

 
நூர் மலபிகா தாஸ்

பிரபல பாலிவுட்  நடிகை நூர் மலபிகா தாஸ். 37 வயதாகும் இவர்  சிஸ்கியன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், வால்க்மென், டெக்கி சாந்தி, ஜகன்யா உபயா என பல  வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.  அத்துடன் நடிகை கஜோல் நடிப்பில்  வெளியான தி டிரையல் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நூர் மலபிகா தாஸ் மிகவும் பிரபலமானார். நூர் மலபிகா தாஸ் சினிமா துறைக்கு வருவதற்குமுன் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்தவர்.  அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நூர் மலபிகா தாஸ் மகாராஷ்டிராவில்  மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

நூர் மலபிகா தாஸ்

 மலபிகா தாஸ் தங்கி இருந்த வீடு கடந்த சில நாட்களாக பூட்டி இருந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.  இதனால் உடனடியாக சந்தேகத்தின் பேரில்  அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு நடிகை மலபிகா தாஸ் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.  போலீசார் அவரது உடலை கைப்பற்றி  பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் நடிகை மலபிகா தாஸ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது பூட்டிய வீட்டில் நடிகை பிணமாக மீட்கப்பட்டுள்ள பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web