மேடையில் காமெடியன் முகத்தில் குத்து விட்ட பிரபல இசைக்கலைஞர்... அதிர்ச்சி வீடியோ!

 
காமெடியன்

  
ஸ்பெயினில்  நேற்று இரவு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஜேமி கரவாகா என்ற காமெடியன் கலந்து கொண்டு பார்வையாளர்களிடையே காமெடி நிகழ்ச்சிகளை செய்து காட்டி  மகிழ்வித்து கொண்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் பிரபல இசை கலைஞரான ஆல்பர்டோ புகிலட்டோவும் கலந்து கொண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.  இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே  ஆல்பர்டோவின் 3 மாத கைக்குழந்தை பற்றி பாலியல் ரீதியாக கோபம் மூட்டும் வகையில் ஜேமி பேசத்தொடங்கினார்.

இதனால் பார்வையாளர்கள் அறுவறுப்பு அடைந்தனர். தங்களது எதிர்ப்பை காட்ட முடியாமல் சீட்டில் நெளிந்தபடி அமர்ந்திருந்தனர்.  அதே நேரத்தில் கோபமடைந்த ஆல்பர்டோ உடனடியாக மேடையில் ஏறி ஜேமியின் முகத்தில் ஒரு குத்துவிட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் பிறகு தம்முடைய செய்கைக்கு  ஜேமி ஆல்பர்டோவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  அவரும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக கூறிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web