எச்.ஐ.வி பாதித்த குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்க காரை விற்ற பிரபல யூடியூபர்!

 
யூடியூபர்

கொரோனா தொடங்கியது முதல் அனைவருமே யூடியூபர் தான். காலையில் எழுந்து பல்தேய்ப்பது முதல் நள்ளிரவு  பாஸ்ட் புட் கடைகளில் சாப்பிட்டு தூங்குவது வரை அனைத்தும் வீடியோக்கள், புகைப்படங்களாக பதிவிட்டு லைக்குகளையும் ஷேர்களையும் அள்ளிவிடுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி எத்தனை நன்மைகள் உண்டோ அத்தனை தீமைகளும் உண்டு. அதிவேகமாக பைக்கில் சென்று ரீல்ஸ் வெளியிடுவது, விபத்து நடந்த இடத்தில் முதலுதவி செய்யாமல் வீடியோவாக செய்து போடுவது என அட்ராசிட்டிகளும் அடக்கம் தான்.  

யூடியூபர்

அதே நேரத்தில் நன்மைகள் செய்து அதன் மூலம் பிரபலமான யூடியூபர்களும் உண்டு தான்.  பிரபல யூடியூபரான ஆரிப் ரஹ்மான், ஆரிப் மைன்ட் வாய்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.  இவரது நடிப்புக்கும், வீடியோகளுக்கும் தமிழில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் யூடியூபர் ஆரிப் ரஹ்மான்  சமீபத்தில்  வாங்கிய தனது காரை விற்று அதில் கிடைத்த பணத்தில், ஈரோடு அரசு மருத்துவமனையில் HIV தொற்றால் பாதித்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் என 350 பேருக்கு தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கியுள்ளார்.

யூடியூப்


இது குறித்து அவர் கூறுகையில், அடுத்த கட்டமாக அரசின் அனுமதியுடன் இந்த குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வேன். அதற்காக  திட்டமிட்டு வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.  இத்தகைய குழந்தைகளை சமூகத்தில் புறக்கணிக்காமல் அனைவரும் ஆதரிக்க வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டார். புத்தாடை பரிசளித்த ஆரிஃப் ரஹ்மானை அரசு மருத்துவர்கள் உட்பட   பலரும் பாராட்டினர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web