பேனர் கிழிந்து பைக்கில் சென்ற தந்தை மகன் மீது விழுந்து படுகாயம்!
தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் வியூகம் அமைத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணத்தை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி திருப்பூர் மாவடத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ள எடப்பாடி பழனிசாமிக்காக, அதிகமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்த பேனர் காற்றில் விழுந்ததால் பள்ளி மாணவன் மற்றும் அவரது தந்தை காயமடைந்துள்ளனர். ஆகஸ்ட் 13 மற்றும் 14ம் தேதிகளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மிகப்பெரிய பேனரை ஒட்டி வைத்திருந்தினர்.

இந்நிலையில், பலத்த காற்றில் பேனர் கிழிந்து, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை- மகன் மீது விழுந்துவிட்டதாக தெரிகிறது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
